'வி கேர் அட் நார்த் வெஸ்ட்' எனும் வடமேற்கு குடியிருப்பாளர் களிடம் விழாக்கால உணர்வைப் பரப்பும் நோக்கத்தில் 1,600 சமூக மற்றும் நிறுவனத் தொண்டூழியர்கள் ஒன்று சேர்ந்து மூன்று வாரங்களில் குடியிருப்பாளர்களுக்கு அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் பணியை மேற் கொண்டுள்ளனர். அந்த வகையில் செம்பவாங்கில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 6,500 குடியிருப்பாளர்களுக்கு நேற்று அன்பளிப்புப் பைகளைப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் தை சின் எலெக்ட்ரிக் நிறுவனம் மற்றும் அட்மிரல்டி உயர்நிலைப் பள்ளியின் 20 தொண்டூழியர்கள் விநியோகித்தனர்.
வடமேற்கு வாசிகளுக்கு 'வி கேர்'அன்பளிப்புப்பைகள்
1 mins read
வெலிங்டன் சர்க்கிளில் வசிக்கும் திரு அபுபக்கர், திருமதி ஜமியா மனானுக்கு அன்பளிப்புப் பை வழங்குகிறார் அமைச்சர் கோ பூன் வான் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

