சிங்கப்பூருடனான இருதரப்பு சர்ச்சைகளுக்கு அமைதியான, சுமுகமான வழிகளில் தீர்வு காண கடப்பாடு கொண்டுள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது. மலேசியா தனக்கு மிக அரு கில் உள்ள சிங்கப்பூருடன் அரச தந்திர தீர்வுகளை எட்டுவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தாய்லாந்தில் சந்தித்துப் பேசி உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பு கடந்த வியாழக் கிழமையும் வெள்ளிக்கிழமையும் தாய்லாந்தின் சியாங் மாய் என்னு மிடத்திலுள்ள ஆசியான் ஓய்வுத் தளத்தில் நடைபெற்றதாகவும் சமத்துவம், பரஸ்பர மரியாதை ஆகி யவற்றின் அடிப்படையிலான தீர்வை நோக்கிய சந்திப்பு இது என்றும் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
"முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் அரசதந்திர முயற்சிகளைக் கீழறுக்கும் விதமாக அண்மைய சம்பவங்கள் நடைபெற்றபோதிலும் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனிடம் இருந்து நேர்மறைத் தாக்கங்களைக்கொண்ட கடிதம் ஒன்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவுக்கு வந் துள்ளது," என்றது அறிக்கை. சிங்கப்பூரின் துவாஸ் கடற்பகுதிக்குள் ஜோகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சப்பியான் அத்துமீறி நுழைந்ததையும் அதனைத் தொடர்ந்து வருடாந்திர இருதரப்பு அமைச்சர்நிலைச் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டதையும் அறிக்கை இவ்வாறு சுட்டியது. "இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

