இரும்புத் துண்டு காணப்பட்ட தால் 'கொய் சாய்' என்ற சீனப் புத்தாண்டு பலகாரம் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. நிலக்கடலையில் செய்யப்பட்ட இந்தப் பலகாரத்தை இறக்குமதி செய்த 'டாஜி டாலி' நிறுவ னத்தை வேளாண்-உணவு கால் நடை மருத்துவ ஆணையம் நேற் றுத் தொடர்புகொண்டு, அவற்றை விற்பனையிலிருந்து மீட்டுக் கொள்ளுமாறு ஆணையிட்டு உள்ளது. அந்த நிலக்கடலை பலகாரத் தைத் தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்த இரும்புத் துண்டு அந்தப் பலகாரத்தில் இருந்ததாக விசா ரணையில் தெரியவந்தது என்று ஆணையம் தெரிவித்தது. சந்தேகத்துக்குரிய பொருட் களை உண்ண வேண்டாம் என்று ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. ஜயண்ட் கடைகளில் விற்கப் பட்ட அந்தப் பலகாரம் விற்பனையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என்று ஆணையம் கூறியது.
நிலக்கடலை பலகாரம் மீட்டுக்கொள்ளப்பட்டது
1 mins read
PHOTO COURTESY OF FOO YEN PYNG -