மூன்று சகோதரர்களுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மணமகள்கள்

மூன்று சகோதரர்களுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மணமகள்கள்

1 mins read
17068884-bc5b-4dd3-8bda-04d90ba54f9b
-

எஸ். வெங்கடேஷ்வரன்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, அது கடவுள் கொடுத்த வரம் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு. ஆனால் ரேணுகா, 30, ஜெயந்தி, 27, கௌரி, 25 ஆகிய மூன்று சகோதரிகளைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது அவர்களின் தாயார் கொடுத்த வரமாக இருக்கிறது. திருமதி ஜெயலஷ்மி கன்னியப்பன் என்ற 50 வயது சிங்கப்பூரர். அவரின் கணவர் சுப்பையா மாணிக்கம், 57. இத்தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு மகள்கள், ஒரு மகன்.

திருமதி ஜெயலஷ்மியின் தாயாருக்கும் அவரின் சகோதரிகளுக்கும் 1960களில் நடந்ததுபோலவே தனது மகள்களும் ஒரே குடும்பத்தில் சகோதரர்களைத் திருமணம் செய்துகெண்டு கடைசிவரை ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று திருமதி ஜெயலஷ்மி ஆசைப்பட்டார். இதற்காக தெய்வத்திடம் வேண்டிவந்தார். "பெண்களை வெவ்வேறு குடும்பங் களில் திருமணம் செய்து கொடுத்தால் பல பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவ்வளவாக பிரச் சினை இருக்காது என்பதே என் எண் ணம்," என்று தமிழ் முரசிடம் திருமதி ஜெயலஷ்மி பகிர்ந்துகொண்டார். முழு விவரம்: epapter.tamilmurasu.com.sg