மரினா பே சேண்ட்ஸில் புதிய காட்சிக்கூடங்கள்

மரினா பே சேண்ட்ஸில் புதிய காட்சிக்கூடங்கள்

1 mins read
7859eb4b-81e5-4ce2-a126-85df6fde48a7
-

சிங்கப்பூரின் பிரதான தற்கால கலைச் சந்தையான ஆர்ட் ஸ்டேஜ் திடீரென ரத்துசெய்யப்பட்டதால், கண்காட்சியாளர்கள் தங்களது கலைப்பொருட்களை காட்சிப்படுத்த ARTery எனப்படும் காட்சியகம் மரினா பே சேண்ட்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கலைகள் மன்றம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவற்றின் ஆதர வுடன் லாபநோக்கமற்ற 'ஆர்ட் அவுட்ரீச்' எனும் குழுவின் ஏற் பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சி இம்மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். கலைச்சந்தையில் இடம்பெற்ற 45 பங்கேற்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் வெளிநாட்டினர் என்று ஆர்ட்ஸ்டேஜ் இணையத் தளம் தெரிவித்தது.