நாளை ஜனவரி 21ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு இன்று பிற்பகலே வேலைகள் தொடங்கிவிட்டன. தைப்பூசத்தன்று கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் அன்னதானத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்றே அண்ணதானத்திற்குத் தேவையான காய்கறிகளை வெட்டும் பணி தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 75க்கும் அதிகமான தொண்டூழியர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கிட்டத்தட்ட 4 நேரம், வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைகோஸ், முருங்கைக்காய் போன்ற பலவகையான காய்கறிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிங்கப்பூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு வந்து முருகக் கடவுளை வழிபடுவதுடன் மதிய உணவு நேரத்தில் வழங்கப்படும் அன்னதானத்திலும் கலந்துகொள்வது வழக்கம்.
தைப்பூசத் திருவிழா: 10,000 பேருக்கு உணவு
1 mins read
கிட்டத்தட்ட 10,000 பக்தர்களுக்கு உணவு தயாரிக்கத் தேவைப்படும் காய்கறிகள். படம்: அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில். -

