பட்ஜெட்: 4 அம்சங்களில் ஒருமித்த கவனம் செலுத்தும்

பட்ஜெட்: 4 அம்சங்களில் ஒருமித்த கவனம் செலுத்தும்

1 mins read
bb941e36-7073-4fb0-9375-676c83f27203
-

கல்வி, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறை களில் அதிகரித்து வரும் தேவைகளிலும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊக்கம் அளிப்பதிலும் சிங்கப்பூரின் தற்காப்பு ஆற்றலை மேம்படுத்து வதிலும் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒரு மித்த கவனம் செலுத்தும் என்று நிதி அமைச் சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் திரு ஹெங், நாடாளுமன் றத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்கிறார்.

உலகப் பொருளியலில் இடம்பெற்றுவரும் மாற்றங்களைக் கணிசமான அளவுக்கு எதிர் நோக்கக்கூடிய சிங்கப்பூரர்களுக்கு உதவு வதும் தொழில்நுட்பங்கள் மூலம் ஏற்படக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஊக்கமூட்டுவதும் வரவுசெல வுத் திட்டத்தின் இதர முக்கிய நோக்கங்க ளாக இருக்குமென அமைச்சர் கூறினார். தெம்பனிசில் குறைந்த வருமானக் குடும் பங்களின் வீடுகளைத் தூய்மைப்படுத்தும் சமூக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நேற்று கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய திரு ஹெங் இந்த விவரங் களைத் தெரிவித்தார்.

"சுகாதாரப் பராமரிப்பிலும் கல்வியிலும் நல்லபடியாகச் செயலாற்றி வந்திருக்கும் நாம் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவோம். இந்தத் துறைகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. "எம்ஆர்டி வழித்தடங்கள், விமானநிலை யங்கள், வீவக அடுக்குமாடி வீடுகள் ஆகிய வற்றை உருவாக்குவது, மூத்த குடிமக்களைப் பராமரித்து வருவது போன்றவற்றை எல்லாம் பார்க்கையில் தேவைகள் மிகவும் அதிகமாக இருப்பது தெரியவருகிறது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.