போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆடவர் இருவர் கைது

போதைப்பொருள் குற்றங்களுக்காக ஆடவர் இருவர் கைது

1 mins read
f97b3a68-01df-40e1-a2e6-271063faeb68
படம்: ‌ஷின்மின் -

குவீன்ஸ்வேயை நோக்கிச் செல்லும் ஜாலான் புக்கிட் மேராவில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.26 மணிக்கு இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி போலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விபத்தில் எவருக்கும் காயம் இல்லை என்றபோதிலும் ஒரு காரில் பயணம் செய்த 35 வயது மற்றும் 28 வயது ஆடவர்கள் இருவரும் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். பின்னர் போலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு, ஒரு காரில் நடத்தப்பட்ட சோதனையில் சிகரெட் பாக்கெட்டுகள் போல இருந்த பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.