சிங்கப்பூர் ஆயுதப்படை பயிற்சியில் நடிகர் அலோய்‌ஷியஸ் படுகாயம்

சிங்கப்பூர் ஆயுதப்படை பயிற்சியில் நடிகர் அலோய்‌ஷியஸ் படுகாயம்

1 mins read
493f3972-752b-41e7-9c1c-4226ed7acfd1
உள்ளூர் நடிகர் அலோய்‌ஷியஸ் பாங். -
Google News Preferred Icon

நியூசிலாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிங்கப்பூர் ஆயுதப்படை பயிற்சியின்போது உள்ளூர் நடிகர் அலோய்‌ஷியஸ் பாங் (படம்) படுகாயம் அடைந்துள்ளார். 28 வயதாகும் முதல் வகுப்பு கார்ப்பரல் பாங் வெய் சோங் கவச வாகனத்தைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கும்போது சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2.05 மணிக்குக் காயம் அடைந்ததாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

படுகாயமடைந்த ஐஎல்எஸ் முதலில் வையுரு மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டதும் ஹெலிகாப்டர் மூலம் ஹேமில்டன் நகரில் உள்ள வைக்கட்டோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் இப்போது தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் அலோய்‌ஷியசின் குடும்பத்துக்கு ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.