நிதி அமைச்சின் ‘பட்ஜெட் 2019’ புதிர்

2018 நிதியாண்டில் எந்தத் துறைக்கு அரசாங்கம் அதிக நிதி செலவிட்டது? பொருளியலிலா, சமூகமா பாதுகாப்பிலா அல்லது உள்கட்டமைப்பிலா? அரசாங்கத்துக்கு எந்த வழியிலிருந்து வருவாய் கிடைக்கிறது? இதுபோன்ற கேள்விகள் நிதி அமைச்சின் பட்ஜெட் 2019 புதிர் போட்டியில் கேட்கப்பட்டுள்ளன. எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் புதிர் போட்டி இன்று காலை 9 மணிக்கு www.singaporebudget.gov.sg எனும் இணையத் தளத் தில் தொடங்குகிறது.

இந்தப் புதிர் போட்டியில் பங்கேற்க சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் நிதி அமைச்சு அழைக்கிறது. பொதுமக்களுக்கான பொதுப் பிரிவைத் தவிர, பள்ளி களுக்கிடையிலான பிரிவில் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள்/ஒருங்கிணைந்த கல்விக் கழகங்கள், தொழிற்நுட்பக் கல்விக் கழகம்/பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் பங்கேற்கலாம். அதிக எண்ணிக்கையில் மாணவர் பங்கேற்பு உள்ள பள்ளிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். புதிர் போட்டிக்குப் பதிவு செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கும் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.

புதிர் போட்டி இன்று தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு இடம்பெறும். நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்ட (பட்ஜெட்) அறிக்கையை பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுவார். இந்தப் புதிர் போட்டியின் மூலம் வருடாந்திர பட்ஜெட் முறை பற்றியும் முக்கிய தேசிய கொள்கைகள் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் அதிகப்படுத்த நிதி அமைச்சு எண்ணியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!