ஓய்வுக்கால வழங்கீடு வயது 65தான், 70 அல்ல என்கிறது மசே நிதிக் கழகம்

ஓய்வுக்கால வழங்கீடு வயது 65தான், 70 அல்ல என்கிறது மசே நிதிக் கழகம்

1 mins read
607ba17f-66b8-441e-8fc4-c2cd9979d9ad
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் -

ஓய்வுக்கால வழங்கீடு வயதை 65லிருந்து 70க்கு அரசாங் கம் அமைதியாக மாற்றியுள்ளது என்று இணையத்தில் பரவி வரும் செய்தி தவறு என்றும் 1965ஆம் ஆண்டு முதல் பிறந்தவர்களுக்கான ஓய்வுக்கால வழங்கீடு வயது 65தான் என்றும் அது 2007ல் அறிவிக்கப்பட்டதிலிருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மத்திய சேம நிதிக் கழகம் தெளிவுப்படுத்தியுள்ளது. மசே நிதிக் கழகம் வழங்கீடு வயதை நெருங்கும் உறுப்பி னர்களுக்கு அனுப்பிய கடிதத்திலிருந்து இந்தக் குழப்பம் தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடி தத்தில் "உங்கள் ஓய்வுக்கால வழங்கீடுகளை 70வது வயதிலிருந்து தொடங்க நீங்கள் விரும்பினால், அதற்கு எவ்வித செயலையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை மக்கள் ஓய்வுக்கால வழங்கீடு வயது 70க்கு மாற்றப்பட்டுள்ளது என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று கழகம் நேற்று முன்தினம் விளக்கியது. ஓய்வுக்கால வழங்கீடுத் திட்டம் இன்னும் எளிமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று 66 வயது திரு ஜானி வோங் கூறினார்.

ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் அவருக்கு இந்தத் தொகை கொடுக்கப்பட வேண்டும். ஒரு வேளை அவருக்கு அந்தத் தொகை அப்போது தேவைப்பட வில்லை என்றால் அவர் வழங்கீடு வயதைத் தள்ளிப்போட கேட்டுக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.