பொத்தோங் பாசிர் கால்வாயில் கறுப்பு நிறத் திரவம்

பொத்தோங் பாசிர் கால்வாயில் கறுப்பு நிறத் திரவம்

1 mins read

பொத்தோங் பாசிர் கால்வாயில் கலந்துள்ள கறுப்பு நிறத் திரவப் பொருள் பற்றி பொதுப் பயனீட் டுக் கழகமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 10.20 மணிக்கு முதலில் சிறிய அளவில் கால்வாயில் கலந்த அந்த கறுப்புத் திரவம் பின்னர் தண்ணீர் முழுவதிலும் கலந்து விட்டது என்று சிங்கப்பூர் இயற் கைச் சங்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தி ருந்தது. கால்வாயிலிருந்து நீர் மாதிரி சோதனைக்கு எடுக்கப்பட்டுள் ளது என்றும் புலனாய்வு நடை பெறுகிறது என்றும் கழகம் தெரி வித்தது. இணைய நீர்த்தர உணர்வுக் கருவிகள் கால்வாய் நீரின் தரம் இயல்பான நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.