தைப்பூசத்தில் காவடி ஏந்துபவர்களுக்கு உற்சாகமளிக்க தவில் வாசிக்கும் ஜதீஸ்வரன்

தைப்பூசத்தில் காவடி ஏந்துபவர்களுக்கு உற்சாகமளிக்க தவில் வாசிக்கும் ஜதீஸ்வரன்

1 mins read
Google News Preferred Icon

இன்று தைப்பூசத்தில் இந்தியப் பராம்பரிய தவில் வாத்தியக் கருவி வாசிக்க பல மாதங்களாகத் தயாராகி வந்துள்ளார் 24 வயது இளையர் ஜதீஸ்வரன் நாயுடு. இவர் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து சுமார் எட்டு முதல் பத்து மணி நேரத்துக்குத் தமது ஹனுசக்தி ஹனுமன் தாஸ் பஜ னைக் குழுவுடன் இணைந்து பக் திப் பாடல்களுக்குத் தவில் வாசிப் பார் ஜதீஸ்வரன். ஒவ்வோர் இசைக் குழுவிலும் பாடகர்களுடன் பிரதான தாள வாத்திய கலைஞர், 'டெம்பரின்' போன்ற கைகளால் வாசிக்கும் இசைக் கருவிகள் வாசிப்போர் ஆகியோர் காவடி ஏந்திச் செல்லும் பக்தர்களுடன் செல்வார்கள்.

"காவடி ஏந்துவோருக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் தவில் வாசிக்க ஆயத்தமாக இருக்கி றேன். அவர்களின் காவடி சுமார் 20 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். அதை அவர்கள் பல மணிநேரமாக ஏந்தியிருப்பார்கள்.

"காவடியின் எடையையும் அதை ஏந்திச் செல்லும்போது ஏற்படும் களைப்பையும் போக்கும்விதத்தில் தவில் வாசிப்பேன். அந்தப் பக்தி இசையில் மூழ்கும் அவர்கள் முருகக் கடவுளின் அருளால் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்," என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார் நிதி ஆலோசகராகப் பணியாற்றும் ஜதீஸ்வரன்.