அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலமே பிரச்சினைகளுக் குத் தீர்வு காண முடியும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார். பீஷானில் நேற்று நடைபெற்ற சமூக நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் இங், நிலுவையில் உள்ள கடல் எல்லை மற்றும் ஆகாயவெளி சர்ச்சைகள் தொடர்பில் கருத்துரைத்தார். "இந்த இரு பிரச்சினைகள் தொடர்பிலும் கவனிக்கத்தக்கது என்னவென்றால் இரு நாடுகளும் மோதிக்கொள்வதைத் தவிர்த்து விட்டோம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அமைதியாக பேச்சு கள், விவாதங்கள் போன்றவற்றின் மூலம் தீர்வு காணலாம்," என்றார் அமைச்சர்.
அமைதியான பேச்சுகளின் மூலமே தீர்வு காணமுடியும்
1 mins read

