தக்க நேரத்தில் கைகொடுக்கும் பரிசோதனை

வயது தொடர்பான செயலாற்றல் சரிவை முன்கூட்டியே கண்டறிய சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனை நோக்கம் கொண்டுள்ளது. தொடக்கத்திலேயே அறிகுறிகள் கண்டறியப்படாவிட்டால் தினசரி வாழ்க்கையில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இர்ஷாத் முஹம்மது

கணவருடன் வாழ்ந்துவரும் 78 வயது திருவாட்டி மோரைஸ் உடல்நலப் பரிசோதனைகளைத் தக்க நேரத்தில் செய்துவரும் துடிப்பான மூத்த குடிமகள்.
அதிகம் நடக்கமுடியாத உதவி தேவைப்படும் 89 வயது கணவரை தமது வீட்டுப் பணிப்பெண்ணுடன் சேர்ந்து கவனித்துவருகிறார்.
தெளிவான கண்பார்வை, திடமான செவிப்புலன், வாய் சுகாதாரம் என ஆரோக்கியமான செயலாற்ற­லுடன் உள்ள திருவாட்டி மொரா­ யஸ் உயர் ரத்த அழுத்தத்தாலும் நீரிழிவாலும் பாதிக்கப்பட்டு உள்­ளார்.


கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது கணவரைச் சந்திக்க வீட்டிற்கு வந்த மூத்த தலைமுறை தூதுவர்கள், திரு வாட்டி மொராயஸை செம்பவாங் கில் அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள சுகாதார செயல் பாட்டுப் பரிசோதனைக்குச் செல்லு மாறு ஊக்கமளித்தனர்.
முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத் தில் வெள்ளித்திரைத் திட்டம் எனும் தேசிய அளவிலான சமூக சுகாதார செயல்பாட்டுப் பரிசோ தனைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


சுகாதார செயல்பாட்டுப் பரிசோ தனை மூலம் கண்பார்வை, செவிப் புலன், வாய் சுகாதாரத்தைப் பரி சோதித்துக்கொண்ட திருவாட்டி மொராயஸ், தமது கண்பார்வை சற்று தெளிவில்லாமல் இருப்பதை அறிந்தார். அதுவரையில் செய்தித்தாள் படிப்பது, ஊசியில் நூல் கோர்த்துத் தைப்பது எனக் கைவேலைகளைத் துடிப்புடன் செய்துவந்தவர் அவர். பரிசோதனைக்குப் பின்னர் திருவாட்டி மொராயஸŸக்கு மூக்­குக் கண்ணாடி அணிவதற்­கான மருத்துவச் சீட்டு வழங்கப்பட்டது. மூக்குக் கண்ணாடி வாங்குவ தற்கான வெள்ளித் திரைத் திட்ட பற்றுச்சீட்டு அவருக்கு வழங்கப் பட்டது. முதியோர்களுக்கான நட­மாட்டம் மற்றும் இயக்கம் வழங்கும் நிதியையும் அவர் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்­றார். அவற்றைக்கொண்டு $5 மட்டுமே செலுத்தி அவருக்கென மூக்குக் கண்ணாடியைப் பெற்றார் திருவாட்டி மொரா­யஸ். தெளிவான கண்பார்வை­யைக் கொண்டு தமது ஆரோக்கிய வாழ்வை அவர் தொடர்ந்து பின்பற்றிவருகிறார்.


மூப்படையும் மனிதர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சற்று குன்றுவது இயல்பு. பொது வாகவே வேகம் குறைந்து உடல் பலவீனமடைந்து தடுமாற்றம் ஏற் படுவதும் இயல்பாகும். அந்த வரிசையில் கண் பார்வை மோசமடைவது, செவிப்புலன் சரி வது, வாய் சுகாதாரம் கெடுவது போன்ற சுகாதார செயல்பாட்டுக் குறைபாடுகளுக்கும் மூப்படைத லுக்கும் தொடர்பு உள்ளது. முதியோர்களின் உடல்நலனை யும் வாழ்க்கைத் தரத்தையும் இத் தகைய மருத்துவ நிலைகள் பாதிக் கக்கூடும்.


முதியோரின் கண்­பார்வை, செவிப்புலன், வாய் சுகாதாரத்தைப் பரி­சோதனை செய்து ஆரம்பக் கட்­டத்திலேயே செயல்பாட்டுச் சரிவை கண்டறிய இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. தேவை நேர்ந்தால் தக்க நேரத்தில் அதற்குத் தீர்வு காணவும் இந்தத் திட்டம் உதவும்.
மூக்குக் கண்ணாடி, செவிச் சாதனம், செயற்கைப்பற்கள் போன்ற உதவிச் சாதனங்கள் தேவைப்­­படும் முதியோர் இந்தத் திட்டத்தின் வாயிலாக சமூகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பராமரிப்பு சேவைகளுடன் இணைக்கப்படு­வார்­கள். அதன் மூலம் கட்டுப்­ படி­யான விலையில் உதவி சாத­னங்­களை அவர்கள் பெற்று சமூ­கத்திலேயே ஆரோக்கியமாக மூப்படையலாம்.60 வயது மற்றும் அதற்கு மேற்­பட்ட சிங்கப்பூரர்கள் இந்த வெள்­ளித்­திரைத் திட்டத்தால் பலனடையலாம்.


முதியோர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின்மூலம் தங்­களின் செயல்பாட்டுச் சரிவை அறிந்துகொள்வது முக்கியம் என்று கருதும் திருவாட்டி மொரா­யஸ் இதன் மூலம் பலன் அடையு­மாறு கேட்டுக்கொண்டார். முன்னோடித் தலைமுறைத் திட்டத்தின் அட்டை வைத்திருப் போருக்கு இந்தப் பரிசோதனைகள் இலவசம். 'சாஸ்' சுகாதார உதவி அட்டை வைத்திருப்போருக்கு $2 மட்டுமே. மற்ற சிங்கப்பூரர்கள் $5 கட்டணம் செலுத்தவேண்டும்.

முக்கிய குறிப்புகள்


வெள்ளித் திரைத் திட்டத்தின் கீழ் உங்கள் வீடமைப்புப் பேட்டையில் நடத்தப்படும் சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையில் ஈடுபடுங்கள்.
projectsilverscreen.sg எனும் இணையத் தளம் மூலமாகவோ 1800 650 6060 எனும் தொலைபேசி எண் மூலம் சிங்கப்பூர் சில்வர் லைனைப் பொதுவிடுமுறைகளைத் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!