பொதுமக்களுக்கு அழைப்பு: போக்குவரத்துப் பற்றி கருத்து சேகரிப்பு 

வாருங்கள், உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்து மேம்பாடுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைப் பகிர்ந்துகொள்ள தக்க தளம் ஒன்று வேண்டுமா?
உங்களுக்காகவே வரும் 26ஆம் தேதி­யன்று தமிழ் முரசு நாளிதழுடன் இணைந்து நிலப் போக்குவரத்து ஆணையம் கருத்துச் சேகரிப்புக் கலந்­துரையாடல் ஒன்றை நடத்தவிருக்கிறது. அக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுப் போக்கு­வரத்துக் குறித்த உங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நியூஸ் சென்டரில் அமைந்துள்ள 'டிரெய்னிங் ரூம்' என்ற பயிற்சி அறையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை 9.30 முதல் 11.30 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி தனலட்சுமி கலந்து­கொள்வார். பங்கேற்பவர்களுக்குச் சிறப்பு அன்பளிப்பு­கள் காத்துக்கொண்டிருக்கின்­­றன. வரும் 23ஆம் தேதி பதிவிற்கான இறுதி நாள். அதனால் தாமதம் வேண்டாம்.

உடனே svenga@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 6319 4009, 6319 4063 ஆகிய எண்களுக்கோ தொடர்புகொண்டு உங்கள் வருகையைப் பதிவு­செய்துகொள்ளுங்கள்.


நிகழ்ச்சி விவரங்கள்

இடம்: தோ பாயோ நார்த், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், நியூஸ் சென்டர், 'டிரெய்னிங் ரூம் 8.1'
நாள்: 26 ஜனவரி 2019, சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 முதல் 11.30 வரை

வரும் 2040ஆம் ஆண்டிற்குள் வேலைக் குச் செல்ல 45 நிமிடப் பயணம், குடியிருப்புப் பேட்டை களின் வசதி­களைக்கொண்ட இடங்­­களை அடைய 20 நிமிடங்கள் என்பது நிலப்போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040ன் ஆலோச னைக்குழு முன் வைத்த உத்தேச இலக்குகளில் ஒன்று.
சென்ற வார சனிக்கிழமையன்று நிகழ்ந்த கவனக்குழு விவாதத்தின் போது மூன்று அம்சங்களில் கருத்துகள் திரட்டப்பட்டன. இந்தக் கருத்து­களை ஒட்டிய பரிந் துரைகள் அடுத்த மாதம் அரசாங் கத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.


போக்குவரத்து மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இந்­நிகழ்வில் கலந்து கொண்டு பேசி­­னார்.
இப்போது பணிகள் தொடங்கி னால் 2040ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை நம்மால் எட்டி விட முடியும்.
உள்­கட்டமைப்பு, முதலீடுகள், விதி­­முறைகள், பயிற்சி ஆகிய அம்­சங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதே வேளையில் பொதுப்போக்குவரத்து மேம்பாட்டின் இலக்கை எட்டுவ தற்கு நாம் ஒவ்வொருவரும் பங்­ காற்ற வேண்டியது அவசியம்.
"அரசாங்கத்திற்கு மட்டுமின்றி மக்களுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது மட்டும் முக் கியம் அல்ல, நாம் அரசாங்கத்துடன் எவ்வாறு ஒத்துழைக்கிறோம் என் ப­தும் முக்கியம்," என்றார் டாக்டர் ஜனில்.
இன்றுவரை உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் மூன்று கருப் பொருட்களாகப் பிரிக்கப்படலாம். அடுத்த சில வாரங்களில் இவை மாற்றத்திற்கும் உள்ளாகலாம்.


முதல் கருப்பொருள் '20 நிமிடம் குடியிருப்பு நகரங்களுக்கும் 45 நிமிடங்கள் நகர மையத்திற்கும்' என்பதை மையமாகக் கொண்டு
உள்­ளது. இந்தக் குறிக்கோளில் பத்தில் ஒன்பது பேர் பொதுப் போக்குவரத்­தின் மூலமாக அவர் களின் குடி­­யிருப்பு மையத்தை 20 நிமிடங்­களுக்குள் அடைவதை­யும் உள்­­­­ள­­­டக்­­கும்.


இந்தக் கொள்கைகளை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டு­ மெனில் அதிகமான பேருந்து, மிதிவண்டிப் பாதைகளும் அதிக மான ரயில் சேவை பாதைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கவனிப்பு மற்றும் கருணை மிகு கலாசாரத்தால் அனைவரையும் உள்ளடக்கும் போக்குவரத்துச் செயல்முறை இரண்டாவது கருப் பொருளாகும். மூன்றாவது கருப்பொருள், பாதுகாப்பான, ஆரோக்கியமான பயணங்களை ஒட்டியதாக இருக்­­­­கும். தனிப்பட்ட ஆரோக்கியம் உட்பட சுற்றுச்சூழலின் நலனையும் கருத்தில்கொள்ளும் பரிந்துரை களாக இவை அமையும். இதனால் சுத்தமான போக்குவரத்துத் தீர்வு களும் பாதசாரிகளுக்கு நட்பார்ந்த, துடிப்புமிக்க நடமாட்டத்திற்கு ஏற்ற குடியிருப்பு மையங்களை உரு வாக்குவதும் அவசியம்.
இந்த மூன்று அம்சங்களை ஒட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிலப் போக்கு வரத்து ஆணையம் பொது மக் களி­டம் கருத்துத் திரட்டும் நடவ டிக்கையைத் தொடங்கியது. அதிலிருந்து கிட்டத்தட்ட 7,000 பொதுமக்களும் தொழில் பங்கு­தாரர்களும் முன்வந்து தங்க ளின் கருத்துகளை வழங்கியுள் ளனர். அத்துடன், கடந்த வாரத்தின் கவனக்குழு விவாதத்தில் தஞ் சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய போக்குவரத்துத் தொழி லாளர்­கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளருமான திரு மெல்வின் யோங் கலந்துகொண்டார். அப்போது அவர், பொதுமக்களுக்கு வேகமான, வசதியான, நல்ல தொடர்புகள் உள்ள பயணத்திற்கான தேர்வு­க­ளுக்குப் பரிந்துரைகளை முன்­வைத்­தார். அதோடு '20 நிமிடம் குடியிருப்பு நகரங்களுக்கு, 45 நிமிடங்கள் நகர மையத்திற்கு' என்ற தலைப்பை ஒட்டியும் பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!