‘ரிலே ஃபார் லைஃப் 2019’ ஓட்டம்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த வர்கள், தொண்டூழியர்கள் பலர் வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதி மாலை 6 மணி முதல் மெதுவோட் டம், நடை போன்றவற்றில் குழுவாகச் சேர்ந்து ஈடுபட உள்ளனர். சிங்கப்பூர் புற்றுநோய்க் கழகத்தின் TalkMed Relay For Life 2019 எனும் நிகழ்ச்சியின் அங்கமாக அது அமையும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஒருபோதும் நிற்ப தில்லை என்பதை உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு குழுவிலிருந் தும் ஒருவராவது அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொண்டிருப்பார்.

புற்றுநோயால் 2014ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட திருவாட்டி ஓங், 42, சிகிச்சைக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியில் தொண்டூழியராகப் பங்கேற்கிறார். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் அதிலிருந்து மீண்டவர்களுக்கும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் ஆதர வாக எங்களைப்போல பலர் இருப் பதைத் தெரிவித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் விளை யாட்டு முனையத்தில் உள்ள தேசிய விளையாட்டரங்கத்தில் மார்ச் மாதம் 2ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 9 மணி வரை தொடர்ந்து நடைபெறும். 

இதில் கிட்டத்தட்ட 7,500 பேர் பங்கேற்பர் என்றும் சுமார் $1 மி. வரை நிதி திரட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் புற்றுநோய்க் கழகத்தின் பயனா ளர்களுக்கு உதவவும் அதன் திட்டங்கள், சேவைகளை விரிவு படுத்தவும் அந்த நிதி பயன்படுத் தப்படும். கடந்தாண்டு $830,000க் கும் அதிகமான தொகை திரட்டப் பட்டது. புற்றுநோயிலிருந்து மீண்டவர்களைக் கொண்டாடு வதுடன் அந்த நோய்க்குப் பலியானவர்களை நினைவுகூரும் விதமாகவும் தற்போது அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்க ளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக வும் இந்த நிகழ்ச்சி அமையும் என இந்த நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ ஊடகப் பங்காளி யான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டனி டான் கூறினார். 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, www.scsrelayforlife.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்