இசையும் உற்சாகமும் நிறைந்த தைப்பூசம்

இசையும் உற்சாகமும் நிறைந்த தைப்பூசம்

2 mins read
73e5e61b-d731-40c3-9a98-6f871336c82f
சிங்கப்பூரில் பல இன, சமய சமூகங்களுக்கிடையே புரிந்துணர் வையும் நம்பிக்கையையும் வளர்க் கும் நிகழ்வுகளில் தைப்பூசமும் ஒன்று என்று கூறினார் தைப்பூசத் திருவிழாவிற்குச் சிறப்பு விருந்தி னராக வருகை புரிந்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர்  கிரேஸ் ஃபூ. நேற்று விடிகாலையில் அருள்மிகு தெண்டாயுதபாணி கடவுளுக்குப் பால் குடம் சுமந்து நடக்கும் பக்தர்கள். படங்கள் த.கவி, திமத்தி டேவிட் -

நாதஸ்வரம், மேள இசையுடன் உறுமி மேளமும் காவடிச் சிந்தும் வழியெங்கும் இசைக்க தைப்பூசத் திருவிழா பக்திப் பரவசத்துடன் நேற்று சிங்கப்பூரில் இனிதே நடந்தேறியது. தைப்பூசத்தை முன்னிட்டு இடம்பெறும் காவடி ஊர்வலத்தில் இசைக் கருவிகளை வாசிக்க கடந்த சில ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு தளர்த்தப்பட்டன. சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலி ருந்து அருள்மிகு தெண்டாயுத பாணி கோயில் வரையிலான 4 கிலோ மீட்டர் தூரத்தை காவடி சுமக்கும் வலி தெரியாமல் இசையோடு நடக்க முடிந்ததை பலரும் வரவேற்றனர். "முருகனை மனதில் நினைத்து, நேர்த்திக் கடன்களைச் செலுத்தச் செல்வோரை ஊக்கமளிக்கவும் உற்சாகப்படுத்தவும் இது பேருத வியாக இருந்தது," என்றார் திரு மணிவண்ணன் பெருமாள், 41. திரு மணிவண்ணணுக்குச் சிறு வயதிலிருந்தே கண் உட்பட மற்ற உடல் அங்கங்களில் கட்டிகள் வரும். அடிக்கடி உடல் நலமற்றிருந்த அவர் குணமாக பால்குடம் எடுக்க தொடங்கினார். 12வது வயதில் உடல் நலத்துக்காக பால்குடம் எடுக்கத் தொடங்கிய திரு மணிவண்ணன் இவ்வாண்டு இடும்பன் காவடியை எடுத்தார். சிங்கப்பூரில் பல இன, சமய சமூகங்களுக்கிடையே புரிந்துணர் வையும் நம்பிக்கையையும் வளர்க் கும் நிகழ்வுகளில் தைப்பூசமும் ஒன்று என்று கூறினார் தைப்பூசத் திருவிழாவிற்குச் சிறப்பு விருந்தி னராக வருகை புரிந்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ. <p> நேற்று விடிகாலையில் அருள்மிகு தெண்டாயுதபாணி கடவுளுக்குப் பால் குடம் சுமந்து நடக்கும் பக்தர்கள். படங்கள் த.கவி, திமத்தி டேவிட்