'ஊழியரை ஈடுபடுத்த சிறந்த வழி தொழில்நுட்ப மாற்றம்'

'ஊழியரை ஈடுபடுத்த சிறந்த வழி தொழில்நுட்ப மாற்றம்'

1 mins read

தொழில்நுட்பம் காரணமாக நிறுவனங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் தங்களுக்கு வேலை போய்விடுமோ என்ற கவலை ஊழியர்களுக்கு ஏற்படக்கூடும். இருந்தாலும் முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களைச் சிறந்த முறையில் ஈடுபடுத்திக் கொள்ள ஒரு வழியாகவும் தொழில்நுட்ப மாற்றங்கள் இருக் கின்றன என்று நேற்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் பணியாற்றக் கூடிய முறைகளைத் தொழில்நுட் பங்கள் எப்படி எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பது பற்றி முதலாளிகள் ஊழியர்களிடம் பேசவேண்டும் என்று கருத்தரங்கில் கூறப்பட்டது.