மருத்துவருக்கு அபராதம்

மருத்துவருக்கு அபராதம்

1 mins read

கிளேனிகல்ஸ் மருத்துவ நிலையத்தில் உள்ள எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் டாக்டர் லிம் லியான் ஆர்ன் என்பவர், 2014 அக்டோபரில் தன்னைப் பார்க்க வந்த ஒரு நோயாளிக்கு ஊசி போட்டார். ஆனால் அந்த ஊசியால் ஏற்படக்கூடிய வேண்டாத விளைவுகளைப் பற்றி அந்த நோயாளியிடம் அந்த மருத்துவர் எடுத்துக் கூறவில்லை. இதற்காக அவருக்குக் அதிகபட்சமாக $100,000 அபராதம் விதிக்கப் பட்டது. மருத்துவர் போட்ட ஊசி, உடலில் போடப்பட்ட இடத்தில் அதிக வலியையும் வீக்கத்தையும் உண்டுபண்ணக் கூடியது. அந்த வேதனை, அந்த நோயாளிக்கு இருந்த எலும்பு நோய் காரணமாக ஏற்பட்ட வலி, வீக்கத்தைவிட அதிகமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இருக்கக்கூடும். மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.