துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று தொடங்கும் இந்த ஆண்டு உலகப் பொருளியல் கருத்தரங்குக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அந்த நான்கு நாள் கூட்டத்தில் பல தலைப்புகளில் அமைச்சர்கள் உரையாற்று கிறார்கள். உலக வர்த்தகம், நிதித்துறை நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, மின்னிலக்கப் பொருளியல், மனித இயந்திரம் போன்ற தலைப்புகளில் அவர்கள் உரையாற்றுவர் என்று நேற்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது. உலகம் முழுவதையும் சேர்ந்த அரசாங்கம் மற்றும் தொழில்துறைத் தலைவர் களையும் அவர்கள் சந்திக் கிறார்கள். "உலகமயம் 4.0: நான்காவது தொழில்புரட்சி யுகத்தில் ஒரு புதிய ஏற்பாட்டிற்கு உரு கொடுப்பது" என்ற தலைப்பில் இந்த ஆண்டுக் கூட்டம் நடக்கிறது.
உலகப் பொருளியல் கூட்டத்தில் துணைப் பிரதமர், அமைச்சர்கள்
1 mins read

