முழுநேர தேசிய சேவையில் சேராமல் மூன்று ஆண்டுகளுக் கும் அதிக காலம் இருந்ததாக 25 வயது ஆடவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. பிறப்பு மூலம் சிங்கப்பூர் குடிமகனாக இருக்கும் சேலி செங் ஸி ஸியோங் என்ற இந்த ஆடவர் மீது, ராணுவ ஆட்சேர்ப்பு சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத் தப்பட்டு உள்ளன. இவர், 2014 ஜூன் 10 முதல் 2017 ஆகஸ்ட் 30 வரை தேசிய சேவையில் சேர தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. செல்லுபடியாகக் கூடிய அனுமதி இல்லாமல் இவர் 2014 மே 19க்கும் 2017 ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கும் இடையில் வெளிநாட்டில் இருந்து வந்ததாக வும் கூறப்படுகிறது. செங்கிற்கு இப்போது $10,000 பிணை அனுமதிக்கப் பட்டு இருக்கிறது. பிப்ரவரி 4ஆம் தேதி இவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.
தேசிய சேவை கடமை தவறியதாகக் குற்றச்சாட்டு
1 mins read
-

