'சி. ஸ்டீன்வெக் வேர்ஹவுசிங்' என்ற நிறுவனத்தில் வேலை செய்த இஸ்மாவி இஸ்மாயில் என்பவர், ஆறு மாத காலத்தில் $2 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள ஏறக்குறைய 130 டன் நிக்கல் தகடுகளைத் தவறாகக் கையாண்டதாகத் தெரியவந்தது. அந்த 41 வயது ஆடவர் எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சைனல், லெட்சுமணன், அலி ஆகியோருக்கு எதிரான வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன.
$2 மி. பொருட்கள் கையாடல்
1 mins read

