வளர்ப்பு நாய்க்கு அனாவசியமாக வலியை ஏற்படுத்தியவருக்கு அபராதம்

வளர்ப்பு நாய்க்கு அனாவசியமாக வலியை ஏற்படுத்தியவருக்கு அபராதம்

1 mins read

நாய்க்கு அனாவசியமாக வலியை ஏற்படுத்தியதற்காக அந்தப் பிராணியின் உரிமையாளருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் வேளாண்=உணவு, கால்நடை, மருத்துவ ஆணையம் அறிக்கை ஒன்றில் இந்த விவரத்தை தெரிவித்துள்ளது. அந்த நாய்க்குக் கடுமையான சிகிச்சை தேவைப் படுவதாகக் கண்டறியப்பட்டது. இருந்தாலும் இங் இயோவ் சியான் என்ற 51 வயது ஆடவர் தொடர் சிகிச்சைக்கு அதை அனுப்பாமல் இருந்துவிட்டார். அந்தப் பிராணி முதன் முதலாக சென்ற ஆண்டு செப்டம்பரில் சிகிச்சைக்குச் சென்றது. அதைத் தொடர்ந்து 2017 நவம்பரில் இந்த ஆணையத்திற்கு அது பற்றி தகவல் கிடைத்தது. மீண்டும் சிகிச்சைக்கு நாயைக் கொண்டு வரும்படி பலமுறை அந்த ஆடவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆடவர் அப்படிச் செய்யவில்லை. அதனால் ஒரு மாதம் கழித்து நாய் இறந்துவிட்டதாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது.