தப்பி ஓடிய தேசிய சேவையாளர் கைது

தப்பி ஓடிய தேசிய சேவையாளர் கைது

1 mins read

போலிசிடமிருந்து தப்பி ஓடிய 22 வயது முழுநேர தேசிய சேவையாளர் உட்லண்ட்ஸ் சர்க்கிள் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார் என்று போலிஸ் தெரிவித்தது. போலிஸ் அதிகாரிகள் உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் இருக்கும் புளோக் 365ல் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.10 மணிக்கு அந்தச் சேவையாளரையும் வேறு ஒருவரையும் சோதித்தபோது அவர் ஓடிவிட்டார். அவருடைய இடது தொடையில் ரத்தம் கசிந்த நிலையில் அவர் ஓடினார். போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது.