நன்யாங் பல்கலை வளாகத்தில் மாணவர் இறந்துகிடந்தார்

நன்யாங் பல்கலை வளாகத்தில் மாணவர் இறந்துகிடந்தார்

1 mins read

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 22 வயது மாணவர் ஒருவர், அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தின் தரைப்பகுதியில் இறந்துகிடந்தார். அந்த மாணவரின் உடல் நேற்றுக் காலை சுமார் 6.25 மணிக்கு, எண் 52 நன்யாங் அவென்யூவில் உள்ள அந்தக் கட்டடத்தில் காணப்பட்டது. தொடர்ந்து அவசர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தங்களுக்கு அந்த மரணம் பற்றி காலை சுமார் 6.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. மாணவர் இறந்துகிடந்த கட்டடத்துக்கு ' தி ஹைவ்' என்று பெயர். அது மாணவர்களுக்கான கற்றல் மையமாகும். புலன்விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்துள்ளது.