தொடர்ந்து உச்சநிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல்

தொடர்ந்து உச்சநிலையில் பயங்கரவாத அச்சுறுத்தல்

1 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் உச்ச அளவில் நீடிப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இங்கு பயங்கரவாதத் தாக்கு தலை நிகழ்த்துவது தொடர்பில் நம்பகமான, குறிப்பிடத்தக்க உளவுத் தகவல் எதுவும் இல்லை. ஆயினும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து உச்ச விழிப்புநிலையில் இருந்து வருவதாக அமைச்சு கூறியது. அமைச்சு தனது இரண்டாவது 'சிங்கப்பூர் பயங்கரவாத அச்சு றுத்தல் மதிப்பீட்டு அறிக்கை'யை நேற்று வெளியிட்டது. "பயங்கரவாத பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு சுயதீவிரவாதப் போக்கிற்கு மாறும் சிங்கப்பூரர் களையும் இங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களையும் கண்டறி யும் பணி தொடர்கிறது.

பொது மக்கள் அதிக விழிப்புடன் இருந்து, பயங்கரவாதத் தாக்குதல் ஏதேனும் நிகழ்ந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்," என்று அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. ஆயினும், கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கிட்டத்தட்ட 2,000 சிங்கப்பூரர்கள் பங்கேற்ற கருத்தாய்வில் ஐந்தில் ஒருவர் மட்டுமே சிங்கப்பூரில் கூடிய விரைவில் பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறக்கூடும் எனக் கூறினர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அத்தகைய தாக்குதல் நிகழலாம் என்பது அவர்களின் கருத்து. ஆய்வு முடிவுகளை மறைமுக மாகச் சுட்டிக்காட்டிய அமைச்சு, "சிங்கப்பூரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பது முக்கியம்," என்றும் வலியுறுத் தியது.