சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், காந்தப்புலம் மூலம் தசைகளை வலுவடையச் செய்யும் புதிய சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 'எம்ரீகன்' என்பது சாதனத்தின் பெயர். உடற்பயிற்சியின்போது உயிரணுக்களில் ஏற்படும் வளர் சிதை மாற்றத்தைப் போன்றே காந்தப்புலம் மூலம் உயிரணுக்கள் தூண்டப்பட்டு தசை வலுவடையச் செய்யப்படுகிறது. இதனால் ஒருவரின் கால்களில் உள்ள தசைகளை வலுவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இணைப் பேராசிரியர் அல்ஃபிர டோ ஃபிராங்கோ-ஒப்ரிகன் தலைமையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மருத்துவ ஆய்வு, தொழில்நுட்ப உயிர்மருத்துவ கழகம், யோங் லூ லின் மருத்துவ பள்ளியின் அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் 12 ஆய்வாளர்கள் 2015, 2017க்கு இடையே காந்தப் புலத்தைப் பயன்படுத்தி இரண்டு மருத்துவ சோதனைகளை மேற்கொண்டனர்.
கால்களின் தசை வலுவடைய காந்தப்புல சிகிச்சை
1 mins read
எம்ரீகன் காந்தப்புல இயந்திரம் செயல்படும் விதத்தை இணைப் பேராசிரியர் அல்ஃபிரடோ ஃபிராங்கோவும் ஆய்வு உதவியாளர் ஷரண்யா ரமணனும் விளக்குகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

