சிங்கப்பூரின் வடக்கு-தெற்கு வழித் தடத்தில் நேற்றுக் காலை உச்சநேரத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் ஏராளமான பயணிகள் அவதிக்கு உள்ளா யினர். மார்சிலிங் எம்ஆர்டி நிலையத் தில் நேற்று ரயில் கோளாறு ஏற் பட்டது. இதையடுத்து ரயில் சேவை ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனம், "மார்சிலிங் எம்ஆர்டி நிலையம் அருகே காலை 7.50 மணியளவில் சமிக்ஞை சாதனம் பழுதடைந்ததால் ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன," என்று கூறியது. பின்னர் காலை 8.00 மணியள வில் டுவிட்டரில் பதிவிட்ட தக வலில் ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் பாதையில் உட் லண்ட்ஸ், இயூ டீ எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே பயணி களுக்குக் கூடுதலாக 30 நிமிட பயண நேரம் தேவைப்படும் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. இந்நிலையில் உட்லண்ட்ஸ், இயூ டீ எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையே பாதிக்கப்பட்ட பயணி களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டது. காலை 8.30 மணி அளவில் பயணிகள் தங்களுடைய பயண நேரத்தில் கூடுதலாக 15 நிமி டங்கள் சேர்த்துக்கொள்ளுமாறு எஸ்எம்ஆர்டி அறிவுறுத்தியது. பின்னர் இந்த நேரம் பத்து நிமிடமாகக் குறைக்கப்பட்டது.
உச்சநேரத்தில் ரயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி
1 mins read
செம்பவாங் எம்ஆர்டி நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருக்கும் படத்தை பயணிகளில் ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். படம்: ஃபேஸ்புக்/ ஹெங் வே சுவான் -

