காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியதாக மூவர் மீது குற்றச்சாட்டு

இரு காப்புறுதி முகவர்களுடன் சேர்ந்து மேனுலைஃப் காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்ற முயற்சி செய்ததாகக் கூறப்படும் ‘கைரோ பிராக்டர்’ சிகிச்சையாளர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
காப்புறுதி பெற்ற 12 பேருக்கு சிகிச்சையளித்ததாக போலியான ஆவணங்களைத் தயாரித்து அவர் ஏமாற்ற முயற்சி செய்தார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பிரஸில்லா டியன் லிங், 27, மைக் சிவ் ஜுன் யோங், 36 ஆகிய இருவருடன் சேர்ந்து ‘கைரோபிராக்டிக் ஃபோகஸ்’ குழுமத்தின் பங்குதாரரான சார்ல்ஸ் லூ பூன் ஆன், 29, அந்த குற்றச்செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் லூ 17 குற்றச்சாட்டுகளையும் டியன் 12 குற்றச்சாட்டுகளையும் சியவ் ஒன்பது குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
2017 ஜூனுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இடையே மூவரும் ‘மானுலைஃப் சிங்கப்பூர்’ நிறுவனத்திடம் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 12 பேருக்கு காப்புறுதி தொகையைப் பெற உதவி செய்தனர்.
இதன் மூலம் ஒவ்வொருவரிடமிருந்து அவர்கள் 200 வெள்ளி முதல் 1,200 வெள்ளி வரை பெற்றனர்.
 

Loading...
Load next