தொழில்நுட்பத் தொடர்பான மோசடிகளில் $28,000 இழப்பு 

இவ்வாண்டு தொழில்நுட்பம் தொடர்பான மோசடி சம்பவங்களில் 28,000 வெள்ளி வரை இழப்பு  ஏற்பட்டுள்ளது என்று போலிசார் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் முதல் மாதத்தில் தொழில்நுட்ப ஆதரவுடன் குறைந் தது நான்கு மோசடி சம்பவங்கள் நடந்துள்ளதை நேற்று போலிசார் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சில சம்பவங்களில் ‘கிரெடிட்’ அல்லது ‘டெபிட்’ அட்டை விவரங் கள் கேட்கப்பட்டு அதன் மூலம் மோசடிக்காரர்கள் அதிகாரபூர்வ மற்ற கட்டணங்களை வசூலித்து விடுவதாக போலிசார் கூறினர்.
இரண்டு விதமான தந்திரங் களை மோசடிக்காரர்கள் பின்பற்று வதாகவும் இதில் கவனத்துடன் இருக்கும்படியும் போலிசார் அறி வுறுத்தியுள்ளனர்.
முதல் வகையான தந்திரத்தில் கணினியில் திடீரென ஒரு தகவல் தோன்றும். 
கணினியில் வைரஸ் கிருமி தொற்றியிருக்கும் என்றோ அல்லது கடவுச்சொல் தகவல்கள் இணையம் வழி கசிந்துவிடும் என்றோ திரையில் வரும் தகவல் எச்சரிக்கும்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொலைபேசி எண் களும் வழங்கப்பட்டிருக்கும்.
கணினி உரிமையாளர்கள் அந்த எண்களுடன் தொடர்பு கொண்டால் ‘மைக்ரோசாஃப்ட்’ அல்லது ஆப்பிள் நிறுவன ஊழி யர்கள் என்று கூறி மோசடிக் காரர்கள், கணினியிலிருந்து வைரஸ் கிருமியை நீக்க குறிப்பிட்ட செயலிகளை இறக்குமதி செய்ய வைப்பார்கள்.