சட்டக் கல்வி பயின்ற மாணவியான 30 வயது ஜெயா அனில் குமார் தனது சான்றிதழ்களில் மதிப்பெண்களைத் திருத்தி அமைத்த குற்றத்திற்காக வழக்கறிஞர் தொழிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்தக் குற்றத்திற்காக சென்ற ஆண்டு ஜனவரியில் அவருக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. சிங்கப்பூர் சட்டத் துறையில், தனக்குரிய வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் குமாரி ஜெயா ஆவணங்களில் திருத்தம் செய்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் (என்யுஎஸ்) பட்டம் பெற்றார். 2012ஆம் அண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தில் வழக்காட அவர் அனுமதி பெற்றிருந்தாலும் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சட்டத் துறையில் பணிபுரிவதற்கான சான்றிதழுக்கு அவர் விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
மதிப்பெண்களில் திருத்தம் செய்த என்யுஎஸ் சட்டத்துறை மாணவி மீது நடவடிக்கை
1 mins read

