கழிவற்ற வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க  $2 மில்லியன் மானியம் அறிமுகம்

கழிவுப் பொருட்களைக் குறைக்­கவும் மறுசுழற்சி முறையை ஊக்கு­விக்கவும் விரும்புவோர் அடுத்த மாதத்திலிருந்து $2 மில்லியன் மதிப்பிலான நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
பொட்டலக் கழிவு, உணவுக் கழிவு, மின்னியல், மின்னணு­வியல் கழிவு உள்ளிட்டவற்றில் கழிவைக் குறைக்க இலக்கு கொண்டிருக்கும் திட்டங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்று சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று அறிவித்தார்.
துவாஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள செம்ப்கார்ப் ஆலைக்கு நேற்று வருகை புரிந்த அவர், கழிவு நிர்வாகத்தில் சிங்கப்பூர் நன்கு மேம்பாடு காண முடியும் என்று கூறினார்.
இவ்வட்டாரத்தில் இரண்டாவது ஆக அதிகமான அளவில் மின் கழிவு உற்பத்தி செய்யும் நாடு சிங்கப்பூர் என்று ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 109,000 டன் மின் கழிவை உற்­பத்தி செய்ததாக அந்த ஆய்வு மதிப்பிடுகிறது.