உலகில் மற்ற நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்துவதைத் தவிர்க்க அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகம் தொடர்பிலான கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வுகாண்பது முக்கியம் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். "இருதரப்பும் சேர்ந்து உடன்பாட்டை எட்டுவது அவசியம், ஏனெனில் வர்த்தக சச்சரவால் உலகப் பொருளியலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்," என்றார் அவர். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் திரு ஹெங், அங்கு புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார்.
நிதி அமைச்சர் ஹெங்: வர்த்தக உடன்பாட்டை எட்டுவது அவசியம்
1 mins read
நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் -

