‘பாப் பாப்’ பட்டாசுகள் துவாஸில் பறிமுதல்

துவாஸ் சோதனைச்சாவடியில் ஐம்பது ‘பாப் பாப்’ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பட்டாசுகள், சிங்கப்பூர் ஆடவர் ஒருவரின் பயணப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன. சிங்கப்பூர் போலிஸ் படை இவற்றைப் பறிமுதல் செய்தது. 

சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அபாயகரமான பட்டாசு சட்டத்தின்கீழ் ‘பாப் பாப்’ பட்டாசுகளை இறக்குமதி செய்வது குற்றமாகும். இதுபோன்ற வெடிபொருட்களும் ஆயுதங்களும் சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாகக் கொண்டு வரப்படுவதைத் தடுக்க சோதனைச்சாவடி ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஆணையம் கூறியது.