கரையோரத்தில் மிதந்த சடலம்

சிங்கப்பூர் நீரிணையில் 45 வயது ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று மிதந்தவாறு காணப்பட்டது.

மரினா சவுத் பியர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலிருந்த கரையோரப் பகுதியில் ஆடவரின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை வழிப்போக்கர் ஒருவர் காணொளி எடுத்து ஸ்டோம்ப் இணையச் செய்தித்தளத்திற்கு அனுப்பியதாக அந்தத் தளத்தில் இன்று வெளிவந்த செய்திக் கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர்.

“அந்த 45 வயது ஆடவரின் சடலம் நீரிலிருந்து மீட்கப்பட்டதை அடுத்து, அவர் மாண்டுவிட்டதாகத் துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்,” என்று போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.