போலி கல்விச் சான்றிதழைக் கொடுத்த இந்திய வழக்கறிஞர் பணிநீக்கம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற தனது கல்விச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை வழக்கறிஞர் ஜெயா அனில் குமார் மாற்றியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான அனுமதியை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2011ஆம் ஆண்டில் ஜெயா, தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். 2013ஆம் ஆண்டில் அவர், தனது கல்விச் சான்றிதழிலிருந்த மதிப்பெண்களை மாற்றி, சட்டச் சேவை ஆணையத்தில் வேலை செய்வதற்கான விண்ணப்பத்திற்குப் பயன்படுத்தினார்.

தனக்கு வேண்டிய வேலையைப் பெறுவதற்காக நேர்மையற்ற செயல்களை 30 வயது ஜெயா தொடர்ந்து செய்து வருவதாக மேல்முறையீட்டு நீதிபதி டே இயோங் குவாங் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருந்தபோதும், ஜெயாவால்  திருந்தி வாழ  முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது.