சூரியசக்தித் தகடு மறுசுழற்சி தொழில்நுட்பம்

சிங்கப்பூரில் சூரியசக்தி ஒரு தூய்மையான, புதுப்பிக்கத்தக்க வளமாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இது நாளடையில் சூரியசக்தித் தொழிற்துறைக்கு ஒரு சவாலை ஏற்படுத்துக் என்று கருதப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட இந்தச் சூரியசக்தித் தகடுகளின் ஆயுட் காலம் முடிந்தவுடன் அவை எவ்வாறு அப்புறப்படுத்தப்படும் என்பதே அந்தச் சவால். 

வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகம் 60 மில்லியன் டன்கள் மின்னழுத்த தகடுகளின் கழிவுகளை உற்பத்தி செய்திருக்கும் என்று அனைத்துலக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் உள்ளூர் எரிசக்தி நிறுவன மான ‘செம்ப்கார்ப் இன்டஸ்டிரிசும்’ சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் நேற்று ஓர் ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து சிங்கப்பூரின் முதலாவது சூரியசக்தித் தகடு மறுசுழற்சி நிலையத்தை அமைக்கவுள்ளன.

உள்ளூர் ஆய்வாளர்களால் வடிவமைக்கப்படும் இந்நிலையம், அந்தத் தகட்டில் உள்ள கண் ணாடி, சிலிக்கான், உலோகங்கள், வெள்ளி, அலுமினியம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட் களைப் பிரித்தெடுக்கும். இந்த உடன்பாட்டின் மூலம் ‘செம்ப்கார்ப் இன்டஸ்டிரிசும்’ சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இணைந்து பணியாற்றி முதலாவது சூரியசக்தித் தகடுகளுக்கான மறுசுழற்சி ஆலையை உருவாக்கும். மேலும் இந்தத் தொழில்நுட்பம் பொது வீடமைப்புப் பேட்டைகள், பள்ளிகள், அரசாங்க இடங்கள், தனியார் வர்த்தக மற்றும் தொழில் துறை வசதிகளில் பொருத்தப்பட்டுள்ள செம்ப்கார்ப்பின் சூரிய சக்தித் தகடுகளை மறுசுழற்சி முறையில் மாற்ற உதவும். 

இந்தத் தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றால் சிங்கப்பூரில் உள்ள இதர கட்டடங்களில் உள்ள சூரியசக்தித் தகடுகளை மறுசுழற்சி செய்வதில் இந்த ஆலை சேவையாற்றும்.