உள்ளூர் கலைத்துறைக்கு அமைச்சர் கிரேஸ் பாராட்டு

அண்மையில் ‘ஆர்ட் ஸ்டேஜ் சிங்கப்பூர்’ எனும் கண்காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டாலும் சற்றும் தளராமல் அதைச் சமா ளித்த சிங்கப்பூர் கலைத் துறையைக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ பாராட்டியிருக்கிறார்.
‘சீ ஃபோக்கஸ்’ எனும் புதிய ‘புட்டிக்’ கலைச் சந்தையைத் திறந்துவைத்து பேசிய திருவாட்டி ஃபூ, கலைத்துறையில் தோழமை யுணர்ச்சியும் வலுவான கலை உணர்வும் பெரிதும் பாராட்டுக் குரியவை,” என்றார்.
‘ஆர்ட் ஸ்டேஜ் சிங்கப்பூர்’ எனும்  நாட்டின் பிரதான தற்கால கலைக் கண்காட்சி இம்மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை 9வது முறையாக நடைபெறவிருந்தது.
ஆனால், அதன் ஏற்பாட்டாளர் கள் கண்காட்சி தொடங்க ஒன் பது நாட்கள் இருந்தபோது இம் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை, அதை ரத்து செய்தனர்.
 அந்தக் கண்காட்சியின் நிறு வனரான லோரென்சோ ருடோல்ஃப் கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அதிகம் விற்ப னையாகவில்லை என்றும் கில் மன் பேரெக்சில் ‘சீ ஃபோக்கஸ்’ எனும் புதிய கண்காட்சியால் தமக்கு சமமற்ற போட்டி ஏற்பட் டுள்ளது என்றும் காரணங்களை முன்வைத்து ‘ஆர்ட் ஸ்டேஜ் சிங்கப்பூர்’ கண்காட்சி ரத்து செய்வதாகக் கூறியிருந்தார்.
“உடனடியாக எடுக்கப்பட்ட இத்தகைய வர்த்தக முடிவு குறித்து நான் ஏமாற்றமும் கவ லையும் அடைந்தேன். அதே வேளையில் பாதிக்கப்பட்ட காட் சியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல காட்சிக்கூடங்களும் கலைக்குழுக்களும் முன்வந்தது மனதை நெகிழ வைத்தது,” என்று கூறினார். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி