பணவீக்கம் டிசம்பரில் 0.5 விழுக்காட்டுக்கு ஏற்றம்

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மற்றும் மூலாதார பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 
இந்த விகிதம் கடந்த நவம்பரில் ஏற்பட்ட ஆறு மாதத்தின் ஆகக் குறைவான விகிதமான 0.3 விழுக்காட்டைக் காட்டிலும் சற்று அதிகம்.
சேவைகள், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் உயர்வான பணவீக்கத்தையும் தங்குமிடச் செலவுகளில் சிறிய அளவு சரிவையும் இது பிரதிபலிக்கிறது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
தங்குமிடச் செலவுகள், தனியார் போக்குவரத்துச் செலவுகள் ஆகியவற்றைத் தவிர்த்த மூலாதார பணவீக்கமும் டிசம்பர் மாதத்தில் ஏற்றம் கண்டது.
அது 2018 நவம்பர் மாதத்தில் கண்ட 1.7 விழுக்காட்டைக் காட்டிலும் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் டிசம்பரில் 1.9 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. 
இரண்டு விகிதங்களும் எதிர்பார்க்கப்பட்டதைவிட ஏற்றம் கண்டன. புளூம்பர்க் நிறுவனம் தயது ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த பணவீக்கம் 0.3 விழுக்காடாகவும் முக்கிய பணவீக்கம் 1.8 விழுக்காடாகவும் இருக்கும் என்று முன்னுரைத்திருந்தது.