புதிய தொழில்நுட்பங்களைச் சமாளிக்க 'ஏஐ' கட்டமைப்பு

1 mins read
ccd5c334-9421-4731-aeb4-ee3afd9eac7e
-

புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விவகாரங்களை நிறுவனங்கள் சமாளிப்பதற்கு சிங்கப்பூர் மாதிரி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகப் பொருளியல் மாநாட்டில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இக்கட்டமைப்பை வெளி யிட்டார். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தனியார் துறை அமைப்புகளுக்கு இக்கட்டமைப்பு, விளக்கமான வழிகாட்டி குறிப்புகளை வழங்கும். அவ்வகையில் இதுவே ஆசியாவின் முதல் கட்டமைப்பு என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. மின்னிலக்கப் பொருளாதாரத் தில் அதிவிரைவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இக்கட்டமைப்பும் மாற்றம் கண்டு வரும் என்று ஆணையம் குறிப்பிட்டது. மனிதனின் அறிவு தேவைப்படும் பணிகளுக்குக் கணினி நிரல்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு. பேசுவதை அடையாளம் காண்பது, முடிவெடுப்பது, மொழி பெயர்ப்பு செய்வது போன்றவை இதில் அடங்கும். சிங்கப்பூரின் மாதிரி கட்டமைப்பு இரு கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எடுக்கப்படும் ஒரு முடிவு, பயனீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடியதாக, தெளிவாக, நியாயமாக அமைவது அக்கொள்கைகளில் ஒன்று. படம்: உலகப் பொருளியல் மாநாடு