மூதாட்டியைத் தாக்கிய பணிப்பெண்ணுக்குச் சிறை

ஓய்வுபெற்ற 69 வயது மூதாட்டி குளித்துக்கொண்டிருந்த போது அவர் மீது கோபமும் எரிச்சலும் கொண்ட இந்தோ னீசிய பணிப்பெண் முடிரிக்கா, 26, குளியல் குழாயைக் கொண்டு அவரை அடித்தார். இதன் தொடர்பில் முடிரிக்காவுக்கு நேற்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில், கைகளில் பலம் இல்லாத போதும் உதவியின்றி குளிக்க முயற்சி செய்தார் மூதாட்டி. இதைப் பார்த்த பணிப்பெண் கோபமடைந்து மூதாட்டியிடமிருந்து குளியல் குழாயை வாங்கி அதைக்கொண்டு மூதாட்டியின் இடது கை மணிக்கட்டில் அடித்தார். இதனால் மூதாட்டிக்கு ஏற்பட்ட காயத்தை மூன்று நாட்கள் கழித்து ஓர் உறவினர் கவனித்து மருத்துவமனையில் சேர்த்தார். இதைத் தொடர்ந்து போலிசில் புகார் செய்யப்பட்டது.