கேலாங் சோதனையில் 51 பேர் கைது

பிடோக் போலிஸ் பிரிவின் தலைமையில் குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் சுங்கச்சாவடி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் கேலாங் வட்டாரத்தில் 9 நாட்களுக்கு நடத்திய சோதனை நடவடிக்கையில் 31 ஆண்களும் 20 பெண்களும் பிடிபட்டதாக நேற்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடந்த இச்சோதனையில் 19 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டோர் கைதானதாக கூறப்பட்டது. போதைப்பொருள், சூதாட்டம், சட்டவிரோத சிகரெட்டுகளையும் தடைசெய்யப்பட்ட மருந்துகளையும் வைத்திருந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடக்கிறது.   
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்