67 வயது மிதிவண்டி ஓட்டுநர் விபத்தில் மரணம்

மிதிவண்டியும் தனியார் பேருந்தும் நேற்று காலை மோதிக் கொண்டதில் மிதிவண்டியை ஓட்டிய 67 வயது ஆடவர் உயிர் இழந்தார்.
ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5க்கும் ஸ்திரீட் 82க்கும் இடையே உள்ள சாலைச் சந்திப் பில் விபத்து நேர்ந்திருப்பது குறித்து போலிசாருக்கு காலை 8.28 மணிக்குத் தகவல் கிடைத்தது. மிதிவண்டியை ஓட்டியவர் உயிரிழந்ததை விபத்து இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கவனக்குறைவுடன் பேருந்தை ஓட்டியதற்காக 56 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Loading...
Load next