படிப்பறிவு இல்லாதவரை ஏமாற்றி $200,000 கையாடிய வங்கி நிர்வாகி

படிப்பறிவு இல்லாதவரை ஏமாற்றி $200,000 கையாடிய வங்கி நிர்வாகி

1 mins read
28d8ed58-0dc5-4bbb-a55d-0a0d17654661
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

படிப்பறிவு இல்லாத வாடிக் கையாளரை நம்பிக்கை மோசடி செய்து அவரிடமிருந்து $200,000க்கும் மேற்பட்ட தொகை யைக் கையாடிய யப் பின் சுன் நேற்று தம் குற்றங்களை ஒப்புக் கொண்டார். 'யுஓபி' வங்கியில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டுவரை நிர்வாகியாகப் பணியாற்றிய யப், 68 வயதான திரு எங் ஹொக் செங்கை 2010இல் சந்தித்தார். எங் ஆங்கிலம் படிக்க, எழுத, மற்றும் புரிந்துகொள்ள முடியாத நிலையில், யப் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரை ஏமாற்றி கடன் அட்டைக்கான விண்ணப்பத் தாளில் கையெழுத் திட வைத்தார். திருமணமான யப், தமக்குத் திருமணமாகவில்லை என்று கூறி ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றி $20,000 கையாடினார்.