ஆளில்லா வானூர்தி சட்டங்கள் மறுஆய்வு

தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆளில்லா வானூர்தி கண்காட்சியில் பங்கேற்பாளர்கள் அங்கு வைக்கப் பட்டிருந்த பல்வேறு விதமான வானூர்திகளைப் பார்வையிட்டனர்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தொடர்பான விதிமுறை கள் மேலும் கடுமையாக்கப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த மாற்றங்கள் இன்னும் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
அதில் இணையம்வழி கட்டாயப் பயிற்சித் திட்டம், ஆளில்லா வானூர்தி இயக்குபவருக்கான உரிமத் திட்டம், 25 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடையுள்ள ஆளில்லா வானூர்திக்கு பகுதி அல்லது முழுமையான சான்றிதழ் திட்டம் போன்றவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் பிரிட்டனின் கெட்விக் விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா வானூர்திகள் பறந்ததன் காரணமாக 1,000க்கு மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றிவிடப்பட்டன.
இதன் காரணமாக ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு தொடர்பான மறுபரிசீலனை தலை தூக்கி உள்ளது.
தற்போதுள்ள சிங்கப்பூர் விதி முறைகளின்படி விமான நிலை யங்கள் அல்லது ராணுவ விமானத் தளங்களுக்கு அப்பால் ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் ஆளில்லா வானூர்திகளை அனுமதியின்றிப் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
‘நகர்ப்புற வாழ்க்கைக்கான தீர்வுகள் தொடர்பில் ‘ட்ரோன்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்து தல்’ என்னும் அதன் முதல் மாநாட்டைத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் நேற்று ஏற்பாடு செய்திருந் தது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹோர்ட்பார்க்’ விளையாட்டுப் பூங்காவில் மண்ணிலும் மரத்திலும் விளையாடி மகிழும்  மை ஃபர்ஸ்ட் ஸ்கூலில் படிக்கும் பாலர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Mar 2019

இயற்கையுடன் இணைந்த விளையாட்டுப் பூங்கா