உள்ளூர் கலைஞர் மணிமாறன் மறைவு

உள்ளூர் கலைஞர் மணிமாறன் மறைவு

1 mins read
297fde82-d9b4-40bb-8faf-3ff6aeaec792
-

பிரபல பாடகரும் புல்லாங்குழலை இனிதே வாசிக்கும் கலைஞருமான திரு மணிமாறன் (படம்) நேற்று ஜோகூர்பாரு மருத்துவ மனையில் காலமானார். உள்ளூர் கலை உலகில் திறம்படைத்த கலைஞர்களில் ஒருவரான திரு மணிமாறன், 1988ஆம் ஆண்டு 'உதயதாரகை' தொலைக்காட்சி பாட்டுத் திறன் போட்டியில் முதல் பரிசை வென்றவர். அத்துடன் உள்ளூர் இந்திய கலைநிகழ்ச்சிகளுக்கு இசை வழங்கும் 'ஃபெப்ரா' இசைக்குழுவிலும் அங்கம் வகித்தார். இன்று மாலை 4 மணிக்கு ஜோகூரிலுள்ள இந்து தகனச்சாலையில் இவரின் நல்லுடல் தகனம் செய்யப்படும்.