2,300 குடும்பங்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்புகள்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காக சிங்கப்பூர் பவர் (எஸ்பி) குழுமம் சிறப்பு அன்பளிப்புப் பைகளை நேற்று வழங் கியது. எஸ்பி குழுமத்தின் கிட் டத்தட்ட 300 தொண்டூழியர்கள், வசதி குறைந்த குடும்பங்களுடனும் முதியோருடனும் அடிக்கடி தங்கள் நேரத்தைக் கழிப்பதுடன் வளங்களையும் பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
நன்கொடையாகப் பெறப்பட்ட அரிசி, ‘மைலோ’, உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்ட பொட்டலங்களைத் தயாரித்து எஸ்பி குழுமத்தின் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வசதி குறைந்தோருக்கு விநி யோகமும் செய்தனர்.
தொண்டூழியர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் போன விஸ்தா, கேலாங் பாரு, பொங்கோல் நார்த், தெம்பனிஸ் வெஸ்ட், தோ பாயோ, உட்குரோவ், இயோ சூ காங் ஆகிய வட்டாரங்களில் வசிப்போருக்குப் பொட்டலங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்