பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை: சிஓஇ எண்ணிக்கை குறைக்கப்படும்

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வழங்கப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) எண்ணிக்கை குறையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

1,600 சிசிக்கும் உட்பட்ட சிறிய கார்களுக்குக் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கை 9.1% குறைந்து மாதத்திற்கு 3,300 ஆக இருக்கும் என்று நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. 1,600 சிசிக்கும் மேற்பட்ட பெரிய கார்களுக்காக வழங்கப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2,471 ஆகும். 

பொதுப்பிரிவுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை 26.4% குறைந்து மாதத்திற்கு 784 ஆக இருக்கும். வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ 25.2% குறைந்து 1,651 ஆக இருக்கும். மோட்டார் சைக்கிளுக்கு 608 சான்றிதழ்கள் மட்டுமே கொடுக்கப்படும். 

ஆக மொத்தத்தில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை கொடுக்கப்படவுள்ள சிஓஇ சான்றிதழ்கள் நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில் வழங்கப்பட்ட சான்றிதழ்களைவிட 12.9% குறைவு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’