உயர் மாடியிலிருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம்

27 வயது இந்திய ஊழியர் நேற்று முன்தினம் உயர் மாடியிலிருந்து  கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த ஊழியர் ஸ்காட்ஸ் சிங்கப்பூர் ஹோட்டலின் ராயல் பிளாஸா கட்டட வெளிப்புறச் சுவரில் சாயம் பூசிக்கொண்டிருந்தபோது அவருடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கயிறு, அருகில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பக்கக் கண்ணாடி ஒன்றுடன் மாட்டிக்கொண்டு அறுபட்டதை அடுத்து அவர் கீழே விழுந்தார். 

சம்பவம் பற்றிய தகவல் மாலை 5.37 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே ஆடவர் மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும் போலிசும் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.